Pages

Labels

Wednesday, May 11, 2011

தாய்மை கவிதை...

தொல்லையென வீட்டில்
தொட்டில் கட்டி போடாமல்
தோளையே தூளியாக்கினாய்
வயிற்றில் சுமந்த வலியை விட
தோள் வலி தொல்லை
தரவா போகிறதா உனக்கு...

* அலுவல் பிரச்னைகள்
ஆயிரம் உனக்குண்டு..
தழுவ நேரமில்லை என்று
தன்னுடனே வைத்துக் கொண்டாய்..

* பசியெடுத்தா புட்டிப்பால்
பார்த்துக் கொள்ள வேலைக்காரி
வசதிகள் உனக்கிருந்தும்
வைத்துக் கொண்டாய் உன்னுடனே..

* கருவறையில் எனை வைத்து
கவலையுடன் பாதுகாத்தாய்..
காலடியில் சொர்க்கம் என்று
கடவுளிடம் வரம் பெற்றாய்..

* வயிற்றில் சுமந்த நாட்களுக்கே
வாழ்நாளெல்லாம் கடனிருக்கு..
இந்த தோள்சுமந்த நாளையெல்லாம்
தீர்ப்பதெப்படி தெரியவில்லை..

* அகிலத்துக்கு அன்னையாய்
அருள்பொழிய ஒருவனுண்டு
அந்த உண்மை மெய்ப்பிக்க
அன்னை தவிர யாருண்டு...?

No comments:

Post a Comment